பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(09-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பெரியோரின் ஆசி கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். எதிர்பார்த்த காரியம் தாமதமின்றி முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.

மிதுன ராசி

அன்பர்களே, புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

அன்பர்களே, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். மன சஞ்சலம் நீங்கி மனமகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிரியமானவர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உறவினர்கள் பாச மழை பொழிவர். பெண்கள் வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆடம்பர, பொருள் சேர்க்கை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். சவாலான காரியங்களை கூட எளிதில் செய்ய முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகர ராசி

நேயர்களே, வேண்டிவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நண்பர்கள் கஷ்டமான நேரங்களில் உதவி செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கையில் எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப வாழ்வில் நன்மை உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். சொத்து பிரச்சனையில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts