பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(10-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனம், வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

நேயர்களே, நண்பர்களிடம் விட்டு கொடுத்து போகவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சிக்கலான காரியங்களை எளிதில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

நேயர்களே, புதிய திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்கள் உறுதுணையாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடந்த காலத்தை நினைத்து மனம் பூரிப்படையும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, வாக்கு சாதுரியத்தால் எதிலும் ஜெயிக்க முடியும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப பாரம் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts