பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(12-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். எதிர்பாராத வழியில் சில செலவுகள் உண்டாகும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

ரிஷப ராசி

நேயர்களே, சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும். தேக பலம் கூடும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் நிதானமாக செயல்படவும்.

மிதுன ராசி

நேயர்களே, எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். நட்பால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். பிரியமானவர்கள் உறுதுணையாக இருப்பர். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பெற்றோரின் பாசம் கிட்டும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனக்கவலைகள் அடியோடு மறையும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

துலாம் ராசி

நேயர்களே, புதியவர்கள் நண்பர்களாவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

அன்பர்களே, எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். மன பாரம் குறையும். முக்கிய நபர்களின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி

நேயர்களே, வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். உறவினர்கள் வழியில் சில தொந்தரவு இருக்கும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப ஒற்றுமை உண்டாகும். வீண் செலவுகளைத் குறைக்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts