பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை குட்டி குட்டி வீடியோக்கள் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது டிக்டாக் செயலி. பயனர்கள் தங்களது வீடியோக்களை இதில் பதிவு செய்யலாம். அது கோடான கோடி ‘டிக்டாக்’ பயனர்களுக்கு சென்றடையும்.
ஆனால், டிக்டாக் செயலியை பயனர்கள் தவறாக கையாளத் தொடங்கினர். முகம் சுழிக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட்டனர். இதனால் குடும்ப வன்முறை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ‘டிக்டாக்’ சந்தித்தது. பின்னர் சீன செயலியான டிக்டாக் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.
‘டிக்டாக்’ தடையை பயன்படுத்தி எம்.எக்ஸ். டக்காடாக் என்ற செயலியையும, ஷேர்சாட் செயலி மோஜ் என்ற குட்டி வீடியோ பதிவு செய்யும் பிளாட்பாரத்தையும் கடந்த 2020 ஜூலை மாதம் தொடங்கியது.
இதில் மோஜ் பிளாட்பார்ம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. இந்தநிலையில் பிரபலமான மோஜ் உடன் டக்காடாக் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஷேர்சாட் கட்டுப்படுத்தும் இரண்டு செயலியின் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.