பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன்14-02-2022 தொடக்கம் 20-02-2022வரை

மேஷ ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பொருளாதார வரவுகளும், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பிரியமானவர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம். குல தெய்வ கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்யவும். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிரயாணங்களால் செலவுகள் நிறைய உண்டு. உத்தியோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களால் அனுகூலமான பலன் கிட்டும். பழைய வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். குடும்ப செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.

மிதுன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். மற்றவர்களால் செய்யமுடியாத காரியங்களையெல்லாம் உங்களால் செய்ய முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். தெய்வ வழிபாட்டால் வரும் இடையூறுகளை தவிர்க்கலாம். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். கணவன் மனைவி அந்நோயன்யம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிப்படவும்

கடக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் மனதில் போட்டு வாய்த்த திட்டங்கள் நிறைவேறும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்து போகவும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். வீட்டு பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நண்பர்களால் நல்ல பலன்களைப் எதிர்பார்க்கலாம். வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் இருக்கும். நெருங்கிய உறவினர்கள் வகையிலும் நற்செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒரு சில புது மாறுதல்கள் ஏற்படும். மனக்குழப்பங்கள் தீரும். கடன் தொந்தரவு ஓரளவு குறையும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். குடும்பத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும

கன்னி ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முக்கிய பணிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற குழப்பம் வரும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்

துலாம் ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். உறவினர்கள் வழியில் நன்மையான செய்திகள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது வீடு, மனை யோகம் ஏற்படும். வேண்டியவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு கவலைகள் அதிகரிக்கும். இழுபறியில் காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் ஆதரவால் நற்பெயர் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் நடைபெறும். தூரத்து பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். எதிரிகள் பலமிழந்து போவர். பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பர். வீடு, மனை, ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் இருக்கும். ஆன்மீக பெரியோர்களின் தொடர்பு கிட்டும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய அமைத்துக்கொள்ளவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவ முன் வருவர். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்

மகர ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முக்கிய காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். உங்கள் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். பிரியமானவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். பெற்றோரின் உடல் நிலை மேம்படும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிப்படவும்

கும்ப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி போன காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். காரிய தடை விலகும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உடல் நலத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டு பின் சீராகும். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்ப நிதி நிலமை சீரடையும். உற்றார், உறவினர்கள் பாசம் கரம் நீட்டுவர். புது வீடு மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். உறவினர்களிடம் வழியில் நன்மை ஏற்படும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : சாஸ்தாவை வழிபடவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts