பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(18-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தினரின் ஆலோசனைகள் நன்மைக்கு வழிவகுக்கும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். வீண் செலவுகளை குறைக்கவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுக நிலை காணப்படும். தன வரவு இருக்கும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை குறையும்.

சிம்ம ராசி

நேயர்களே, புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோரிடம் அனுசரித்து போகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். எதையும் வெளிப்படையாக மற்றவரிடம் பேச வேண்டாம். கடன் தொல்லை குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். வீடு மாற்றம் தாமதமாகும். மனதில் இருந்த வீண் கவலைகள் விலகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, நண்பர்களிடம் நல்லுறவு ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புது உறவுகள் கிடைக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கும்ப ராசி

நேயர்களே, எதிர்காலம் நமக்கே என்று நம்பிக்கை பிறக்கும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பம் குதூகலமாக இருக்கும். எதையும் சாதிக்கும் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts