பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(20-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, முக்கிய வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்களால் நன்மை உண்டு. மறைமுக எதிப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி

நேயர்களே, வெளிவட்டார பிரச்சனைகள் குறையும். உடல், மன சோர்வு நீங்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகமாகும். மனதில் தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி

நேயர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகம் இருக்கும். பிரியமானவர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பழைய சொந்தங்கள் உங்களை தேடி வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, பயணங்கள் வெற்றிகரமாக அமையும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, சொந்த வேலைகளை சாமர்த்தியமாக முடிக்க முடியும். பெரியோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க முடியாத சூழல் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். உறவினர்களின் அன்புத் தொல்லை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க பார்க்கவும். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிட்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts