பிந்திய செய்திகள்

ஐரோப்பாவை கடுமையாக தாக்கிய பெரும் புயல்..!

மணிக்கு 196 கிமீ (122 மைல்) வேகத்தில் வடமேற்கு ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயல் அப்பகுதியில் குறைந்தது எட்டு பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.

அதுமட்டுமல்லாமல் அட்லாண்டிக் புயலான யூனிஸ் புயல், கட்டடங்களை சேதப்படுத்தியது மற்றும் விமானம், நிலம் மற்றும் கடல் வழியான பயணங்களை முடக்கியது.

கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (18)பிரித்தானியாவின் பெரும் பகுதியை தாக்கிய யூனிஸ் புயல், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் வடக்கு பிரான்சின் சில பகுதிகளைத் தாக்கி கண்டம் முழுவதும், பலத்த சேத்தை ஏற்படுத்தியது.

ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயலால் எட்டு பேர் உயிரிழப்பு! – Athavan News

அத்துடன், வெள்ளிக்கிழமை மாலை டென்மார்க் மற்றும் ஜேர்மனியிலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து நெதர்லாந்து அதிகாரிகள் சிவப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. சுமார் புறப்பட இருந்த 150க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துசெய்யப்பட்டன.

அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மரங்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஓ தி ஹேக் கால்பந்து கழக மைதானத்தின் மேற்கூரையின் துண்டுகள் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெல்ஜிய நகரமான யப்ரெஸில் 79 வயதான பிரித்தானியர் ஒருவர் பலத்த காற்றினால் படகில் இருந்து தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெல்ஜிய அதிகாரிகள் குடிமக்களுக்கு அவசரகாலத்தில் மட்டுமே வெளியே செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், அதே நேரத்தில் வடக்கு பிரான்ஸ் மாகாணமான பிரிட்டானியில் நான்கு மீட்டர் உயர அலைகள் பதிவாகியதால், ரயில் பயணம் குறைக்கப்பட்டது.

டென்மார்க்கில், ரயில்களின் வேகத்தைக் குறைக்க உத்தரவிடப்பட்டது மற்றும் பாலங்கள் மற்றும் வீதிகள் மூடப்பட்டுள்ளன.

ஜேர்மனியில், வானிலை ஆய்வாளர்களால் புயலுக்கு ஸெய்னெப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மணிக்கு 160 கி.மீ(100 மைல்) வேகத்தை எட்டும் மற்றும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புயலுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, புதனன்று இரவு தாக்கிய ஸெய்னெப் புயல், மரங்களை வேரோடு பிடுங்கி, லொரிகளை கவிழ்த்து, ஜேர்மனியில் 37 வயது நபர் ஒருவரின் கார் உட்பட மூன்று உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது. இந்த கார் விபத்து ஒரு மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்டது.

வடக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா, பெர்லின், பிராண்டன்பர்க் மற்றும் ஹாம்பர்க் உள்ளிட்ட பகுதிகளில் அவசரகால சேவைகள் இருப்பதால், தேசிய ரயில் இயக்குனரான டாய்ச் பான் பிராந்திய மற்றும் நீண்ட தூர ரயில்களை இரத்து செய்தார்.

ஜேர்மன் வானிலை சேவை, முழு நாட்டிற்கும் மூன்றாம் நிலை புயல் எச்சரிக்கையை அறிவித்தது, மேலும் 1,300 கிமீ (808 மைல்) நீளமுள்ள வட கடல் கடற்கரைக்கு அதிகபட்ச நிலை நான்கு எச்சரிக்கையை அறிவித்தது. வடக்கு கடல் தீவுகளில், மணிக்கு 170கிமீ (105 மைல்) வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts