Home உலகம் ஐரோப்பா முதன்முறையாக ரஷ்யா வெளியிட்ட புதிய அறிவிப்பு

முதன்முறையாக ரஷ்யா வெளியிட்ட புதிய அறிவிப்பு

0
முதன்முறையாக ரஷ்யா வெளியிட்ட புதிய அறிவிப்பு

முதல் முறையாக ரஷ்யா உக்ரைனுடனான போரில் தமது படையினர் உயிரிழந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், போரில் 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

இதேவேளை தமது தாக்குதலில் 6000 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாகவும் பெருமளவு இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here