பிந்திய செய்திகள்

கிரேக்கத்தின் கோர்பு தீவுக்கு அருகில் தீவிபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் !

கோர்பு தீவுக்கு அருகே தீவிபத்துக்குள்ளானகப்பலில் இருந்து காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்கள் அனைவரும் பல்கேரியா, கிரீஸ், துருக்கி மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து ஏற்பட்ட தீ, மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தபோதும் கப்பல் தற்போது தரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இதில் சிக்கிய 280 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் இரண்டு பேர் படகில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts