பிந்திய செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கிய உக்ரைன் அழகுராணி!

உக்ரைன் – ரஷ்யா இடையே 4-வது நாளாக போர் இடம்பெற்று வருகின்ற உக்ரைனின் முன்னாள் அழகு ராணி ஒருவர் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராடனது நாட்டின் இராணுவத்தில் சேர்ந்துள்ள்ளார்.

அனஸ்டாசியா லென்னா 2015 ஆம் ஆண்டில் 24 வயதில் தேசிய அழகுராணிப் போட்டியின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார்.

இந்த மொடல் அழகி தனது கவர்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றி உக்ரைனுக்காக ஆயுதம் தூக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

துருக்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்த அவரது வேலையிலிருந்து விலகி, ஆயுதம் தூக்கியுள்ளார்.

ஏர்சாஃப்ட் என்று தலைப்பிடப்பட்ட அனஸ்தேசியாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், ஆயுதத்தை பயன்படுத்துவதில் அவருக்கு அனுபவம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக மரங்கள் நிறைந்த அரங்கங்கள் மற்றும் உட்புறப் பயிற்சி மைதானங்களில் முழு இராணுவ ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களை அவர் பலமுறை பகிர்ந்துள்ளார்.

இதனால், இப்பொழுது அவரது அறிவித்தல் உண்மையானதா அல்லது வழக்கமாக லைக்கிற்காக இடப்படுவதை போன்றதா என்பது தெரியவில்லை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts