பிந்திய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்ய தளபதி உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 9தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் கெர்ஷோன் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய ராணுவம், தற்போது உக்ரைனில் உள்ள சபரோசியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி, உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கெர்சன் மற்றும் எனர்கோட் நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தற்போது மிகைல் நகரை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செர்னிவ்சி பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் 41வது தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவ்ஸ்கி கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்வதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சி தொடர்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts