பிந்திய செய்திகள்

36நாடுகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான் எல்லையைப் பயன்படுத்த ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவைப் பின்பற்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா என 30க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில், அடுத்தடுத்து தங்களது வான் எல்லை வழியாக ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தன.

அதற்குப் பதிலடியாகவே ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனிடையே சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருளாதார தடைகளை பயன்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அதுவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமான இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts