பிந்திய செய்திகள்

விளாடிமிர் புதினின் இடத்தை பிடிக்கவுள்ள உக்ரைன் அதிபர்!

பிரான்ஸ் நாட்டிரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மெழுகு உருவ சிலை அகற்றப்பட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ரஷ்யா அதிபரின் இந்த சிலை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே இருந்த ரஷ் அதிபரின் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை ஒரு கிடங்கிற்கு மாற்றப்பட்ட அதேவேளை, புதினின் சிலைக்கு பதிலாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சிலையை மாற்றுவதற்கு அருங்காட்சியகம் பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து, அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில்,

” கிரேவின் அருங்காட்சியகத்தில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை நாங்கள் ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அருங்காட்சியகத்தின் வரலாற்றில் முதல்முறையாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம்” என தெரிவித்தார்.

Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts