லண்டனில் தேசிய சுகாதார சேவையில் மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த இலங்கை வைத்தியர் ஒருவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அவரை சேவையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய சுகாதார சேவையின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவரே முதல் பிரிவு பெண் மருத்துவரிடம் தவறாக செயற்பட முயற்சித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் அதே வருடம் அந்த வைத்தியர் பணி நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மேல் முறையீடு செய்துள்ளதனால் இந்த செய்தி மீண்டும் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது.
விசேட கற்கை பயிற்சி ஒன்று வழங்குவதாக கூறி பெண் மருத்துவரை ஹோட்டல் அறைக்கு அழைத்த குறித்த வைத்தியர், பெண் மருத்துவரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டுள்ளார்.
அவரது மோசமான செயற்பாடு நீடித்த நிலையில் தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு இலங்கை மருத்துவரே காரணம் என பெண் மருத்துவர் தனது நண்பிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதற்கமைய அவரது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இலங்கையரான மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தனக்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக இலங்கையரன அந்த மருத்துவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
அதில் தான் பிரித்தானிய ஆசியராக இருப்பதால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதாகவும் கூறி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சிகளுடன் உறுதி செய்யப்பட்டமையினால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் துஷ்பிரயோகத்திற்கு மேலதிகமாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இலங்கையரான குறித்த மருத்துவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் மேலும் தெரிவித்துள்ளது.