பிந்திய செய்திகள்

விண்வெளியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்க்காக லேசர்!

புவியின் சுற்றுவட்டப்பாதையில் இந்தச் செயற்கைக்கோள்களுடன், செயலிழந்த செயற்கைக்கோள்களும் ஏராளம் சுற்றி வருகின்றன. இவற்றை “விண்வெளிக் குப்பை´ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தொலைத்தொடர்பு, காலநிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது.

அதிக வேகத்தில் பயணித்து வரும் இந்த விண்வெளிக் குப்பைகளால் செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் (ஐஎஸ்எஸ்) ஆபத்து உள்ளது.

ராக்கெட் தாக்குதல் மூலம் விண்வெளிக் குப்பைகளை அழிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லேசர் மூலம் விண்வெளிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி முகமை (இஎஸ்ஏ) ஈடுபட்டுள்ளது. இதற்காக ஸ்பெயினில் “இசானா-1´ என்ற ஒரு நிலையத்தை அமைத்துள்ளது.

இத்திட்டத்தின்படி, விண்வெளிக் குப்பைகள் மீது இந்த நிலையத்திலிருந்து லேசர் ஒளி பாய்ச்சி அவை அகற்றப்படும்.

அத்துடன், விண்வெளிக் குப்பைகளை பூமியைச் சுற்றியுள்ள வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைக்கு நகர்த்தவும் செய்யும்.

சிதறடிக்கப்படும் குப்பைகள் ஒன்றுடன் ஒன்றும், செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது மோதாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இஎஸ்ஏவின் லேசர் நிலையம் அடுத்த இரு ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டு, அதன் பிறகு விண்வெளிக் குப்பைகளை அகற்றும் திட்டப் பணி தொடங்கப்படும். இதுபோல பல்வேறு நிலையங்களை ஐரோப்பா முழுவதும் அமைக்க இஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts