பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் பாச மழை பொழிவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நல்லவர்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி ராசி

நேயர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

துலாம் ராசி

நேயர்களே, அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் பேராதரவை பெற முடியும். பிரியமானவர்கள் பகைமை பாராட்டுவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். கடன் சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். மனம் தெளிவு பெரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மீன ராசி

நேயர்களே, யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். பிராத்தனைகள் நிறைவேறும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts