பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நட்பால் நல்லது நடக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

அன்பர்களே, முக்கிய பணிகள் நிறைவேறும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

அன்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப பொறுப்புகள் ஏற்க வேண்டிவரும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

அன்பர்களே, சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சில மருத்துவ செலவுகள் வரும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். காரிய தடை விலகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்தை வரவேற்பர். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts