பிந்திய செய்திகள்

யார் எந்த மொழி பேசினாலும் உங்களால் உடனே புரிந்துகொள்ள முடியும்!

மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாகும் மெட்டாவெர்ஸ் உலகில் நாம் விரும்பிய விஷயங்கள் அனைத்தையும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மெட்டாவெர்ஸில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாடுவதற்கு அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய மொழி பெயர்ப்பு அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தில் பங்கேற்கும்போது அவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கு தடை எதுவும் இருக்கக்கூடாது. அவர்கள் எந்த மொழியில் பேசினாலும், எழுதினாலும் அதை உடனுக்குடன் மொழிபெயர்ந்து சம்பந்தப்பட்ட நபர் புரிந்துகொள்ளும் வகையில் மெட்டாவெர்ஸ் இயங்கும்.

மொழிகளில் உள்ள நுண்ணிய அர்த்தங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அம்சம் வடிவமைக்கப்படும். சிறியது, பெரியது என உலகில் உள்ள அனைத்து மொழிகளும் இதில் இடம்பெறும். செயற்கை நுண்ணறிவு மூலம் மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிக்க இருக்கிறோம்.

இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts