பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, நண்பர்கள் மத்தியில் இருந்த இறுக்கமான மனநிலை மாறும். எதிரிகள் விலகுவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்ப உறவுகளில் சண்டை சச்சரவுகள் வந்து போகும். சிக்கனமாக வாழ பழகிக்கொள்ளவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பம் சீராக நடைபெறும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி

நேயர்களே, மனதில் உயர்வான சிந்தனைகள் உதிக்கும். உறவினர்கள் வழியில் சங்கடங்கள் வரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் ஆர்வம் கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, அடுத்தவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தாருடன் சுமுக உறவு ஏற்படும். அடுத்தவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம். கடன் பிரச்சனை குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனை இருக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.

தனுசு ராசி

நேயர்களே, பொருளாதார வளர்ச்சி இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளி போகலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும். மன வலிமை கூடும். ஆதாயமில்லாத செயல்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, முக்கிய காரியங்களைத் தள்ளி வைக்கவும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உடன்பிறப்புகள் நேசம் கரம் நீட்டுவர். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts