பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். மன சோர்வு நீங்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். புதிய நட்பு வட்டம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

மிதுன ராசி

நேயர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சொந்த பந்தங்களால் மன உளைச்சல் ஏற்படும். அடுத்தவர்கள் மனம் நோகும்படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

நேயர்களே, பல புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சங்கடங்கள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். அன்பான பேச்சால் எல்லோரையும் கவர முடியும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

நேயர்களே, பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரைத்து போகவும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மகர ராசி

நேயர்களே, யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். இனம்புரியாத பயம் வந்துப் போகும். உடல் நலம் மேன்மை பெரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts