பிந்திய செய்திகள்

சாம்சங் அறிமுகம் செய்துள்ள 5 லேப்டாப்கள்!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு லேப்டாப்களும் AMOLED FHD டிஸ்பிளே 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. இந்த கேலக்ஸி புக்2 சீரிஸில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது.

13-3 இன்ச் வேரியண்ட் லேப்டாப் இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸில் வருகிறது. 15.6 இன்ச் வேரியன்ட் இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ மற்றும் இன்டல் ஆர்க் கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்கள் 8 ஜிபி, 16 ஜிபி மற்றும் 32 ஜிபி LPDDR5 ரேம் வேரியண்டுகளில் 1 டிபி ஸ்டோரேஜ்ஜுடன் வருகின்றன. மேலும் இதில் FHD 1080p வெப் கேமரா, டூயல் அரே மைக் தரப்பட்டுள்ளது. 13.3 இன்ச் வேரியண்ட் 63Wh பேட்டரியுடனும், 15.6 இன்ச் வேரியண்ட் 68Wh பேட்டரியுடனும் வழங்குகிறது.

மேலும் இந்த லேப்டாப்பில் பேக்லிக்ட் கீபோர்ட், பிங்கர்பிரிண்ட் பவர் கீ, டோல்மி அட்மோஸ், வைஃபை 6இ, 802.11 ax, 5.1 வெர்ஷன் ப்ளூடூத் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.79,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி புக்2 ப்ரோ 360 லேப்டாப் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் வருகிறது. இந்த இரு வேரியண்டுகளும் 16:9 ரேட்ஷியோவுடன் FHD Super AMOLED டிஸ்பிளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920×1080 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 32 ஜிபி வரையிலான LPDDR5 ரேம், 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ், இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த லேப்டாப் 1080 பிக்சல்ஸ் ஃபுல் ஹச்.டி டிஸ்பிளே, டூயல் அரே மைக் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.94,640-ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி புக்2 லேப்டாப்பில் 15.6-inch FHD+ OLED டிஸ்பிளே, 1,920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 12-வது ஜென் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ3, ஐ5, ஐ7 பிராசஸர்கள், 16ஜி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ்ஜில் வருகிறது. இதில் 61.Wh பேட்டரி, 65W சர்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி புக்2 360 லேப்டாப்பில் 13-inch FHD+ OLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 1,920×1080 சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த லேப்டாப்பும் 12-வது ஜென் ஐ7 மற்றும் கோர் ஐ5 கான்பிகரேஷனில் 16 ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜில் வருகிறது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.67,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக்2 பிசினஸ் லேப்டாப் FHD anti-glare டிஸ்பிளேவுடன் வருகிறது. Intel vPro-உடன் 12th-gen Intel Core i5 அல்லது i7 பிராசஸர்கள், 12-வது ஜென் இன்டல் கோர் ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 பிராசஸர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த லேப்டாப் இன்டல் UHD கிராபிக்ஸ் அல்லது இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் அல்லது NVIDIA GeForce MX570 A கிராபிக்ஸுடன், 64 ஜிபி ரேம் வரையிலான 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேசுடன் வருகிறது.

இந்த லேப்டாப்பில் FHD 1080p IR வெப்கேமுடன் வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts