பிந்திய செய்திகள்

இந்தவார ராசி பலன் 28-02-2022 முதல் 06-03-2022 வரை

மேஷம்:

மேஷராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. எதிர்பாராத பணவரவு வந்து பையை நிரப்பும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் அற்புதமான பலன்கள் உண்டு. புதிய முயற்சிகளை தொடங்குவதாக இருந்தால் இந்த வார தொடக்கத்திலேயே தொடங்கி விடுங்கள். வார இறுதி நாட்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கோபப்படக்கூடாது, அனாவசியமாக மூன்றாவது மனிதனின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பார்த்து கொண்டால் போதும். மற்றபடி தினசரி வேலைகளை எப்போதும்போல செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த. சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். சிவன் வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். வெளியூருக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தால், உங்களுடைய ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக முன் கோபப்பட வேண்டாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தால் கூட கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். பிப்ரவரி 28, மாதம் 1 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளதால், அந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும். –

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் பொறுமை அவசியம் தேவை. யாராவது கேள்வி கேட்டார்கள் என்றால், பதில் அளிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். உடனடியாக ஒரு பதிலை சொல்லவே சொல்லாதீங்க. நீங்கள் சரியான பதிலை சொன்னாலும், உங்களுக்கு அதன் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எவ்வளவுக்கு எவ்வளவு உஷாராக இருக்கிறீங்களோ அவ்வளவு பிரச்சனைகள் குறைவாக இருக்கும். செய்யும் வேலையில் நிறைய கவனம் தேவை. அலட்சியப்போக்கு இருக்கவே கூடாது. ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்பவும் நிதானமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்க போகின்றது‌. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும்‌. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உறவினர்களிடத்தில் பேசும்போதும், நண்பர்களிடத்தில் பேசும்போதும், கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனாவசியமான வார்த்தைகளை பேச வேண்டாம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை படுகிறது. எந்த விஷயத்திலும் அவசரப்படக் கூடாது. பெரியவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது. உங்களுடைய பார்ட்னரிடம் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாட்சி இல்லாமல் எந்த பரிமாற்றமும் செய்யவேண்டாம். பெரிய அளவில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு. தினம் தோறும் அனுமன் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்களே எதிர்பாராத நல்ல தகவல் உங்கள் செவிகளை வந்தடையும். சொந்த தொழிலில் ஒரு சில சிக்கல்கள் வரலாம். ஆனால், பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டியதாக இருக்கும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடக்க கூடிய வரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய உடம்பில் ஒரு சுறுசுறுப்பும் உத்வேகமும் பிறக்கும். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட இன்றே செய்து முடித்து விடுவீர்கள். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு மழைதான். சில பேருக்கு சம்பள உயர்வு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் எலாமல் சீக்கிரத்தில் முடியும். அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. யாரிடமும் அனாவசியமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டாம். வீண் விவாதத்திற்கு செல்ல வேண்டாம். வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். எதிலும் பொறுமையாக நின்று நிதானத்தோடு யோசிப்பதே நன்மைதரும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அது ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். இல்லத்தரசிகளுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதற்கேற்ற வருமானம் இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால், கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்தபடி காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் கையெழுத்தாகும். நேரத்திற்கு சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் இல்லாத வாரமாக இருக்கப்போகின்றது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் அதில் தெளிவான முடிவை எடுக்கப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த குழப்பங்கள், சொந்த தொழிலில் இருந்து வந்த குழப்பங்கள், குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், அத்தனைக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும். அலைச்சல் இல்லாமல் நிம்மதியாக ஓய்வு எடுக்கக்கூடிய நேரம் கிடைக்கும். கோவில்களுக்கு சென்று நேரத்தை ஆன்மீக ரீதியாக செலவு செய்யப் போகிறீர்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. வேலையில் அவ்வப்போது சில அலைச்சல்கள் இருந்தாலும், இந்த வார இறுதியில் மனத் திருப்தி கிடைக்கும். வேலையில் ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயமாக சாதித்து இருப்பீர்கள். அதற்கான பாராட்டும் பெறுவீர்கள். ஆக வேலைப்பளுவை நினைத்து வருத்தப்பட வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தோடு ஆன்மீக ரீதியாக சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு மனநிறைவை கொடுக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts