பிந்திய செய்திகள்

பொது இடங்களில் வைஃபை பயன்படுத்தும் நபரா நீங்கள்? இதை படியுங்கள்

இன்று இண்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நமக்கு தேவையான டேட்டாக்கள் மொபைல் இண்டர்நெட் மூலம் தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இருப்பினும் பலர் பொது இடங்களில் வைஃபை மூலம் தரப்படும் இலவச இண்டர்நெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருக்கும் ஆபத்துகளையும், அவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் இப்போது காணலாம்.

ரெயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தரப்படும் இலவச வைஃபையைப் பயன்படுத்தும் போது, குற்றவாளிகள் எளிதாக நமது தகவல்களை திருடலாம். அவற்றின் மூலம் பண இழப்பு முதல் ஆபத்தான குற்றங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஏற்படலாம். இவற்றை தவிர்ப்பதற்காக நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இதன்படி, முதலில் நமக்கு தரப்படும் இண்டர்நெட் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வைஃபை நெட்வொர்க் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வைஃபை ஆபரேட்டரை தொடர்புகொண்டு சரியான சிக்னல் பெயரை கேட்டறிந்துகொள்ள வேண்டும்.

இலவச வைஃபையில் உள்ள ஆபத்து

ஹேக்கர்கள் போலி வைஃபையை உருவாக்கி மக்களின் தகவலின் திருடுவதை தவிர்க்க ஐபி முகவரி வழியாக உங்கள் சாதனங்களை வைஃபையுடன் இணைக்கலாம்.

அதேபோன்று பொது இடங்களில் வரும் வைஃபை மூலம் நாம் பயன்படுத்தும் இணையதள முகவரிக்கு முன்னால் HTTPS இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.

நமது கணினி மற்றும் ஸ்மார்ட்போனை பொது இடங்களில் உள்ள வைஃபையில் இணைக்கும்போது ஆன்டி-வைரஸ் அல்லது பிற இணைய பாதுகாப்பு செயலி, மென்பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க விபிஎன்-ஐ பயன்படுத்தலாம். வி.பி.என் பொது வைஃபையில் நமது தரவுகளை பாதுகாக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts