பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் 02-03-2022

மேஷ ராசி

நேயர்களே, பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. கடுமையான பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிறு சிறு சண்டை, சச்சரவுகள் வரும். நட்பு வழியில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, மனதில் புது சிந்தனைகள் உதிக்கும். சொந்த பந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவர். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்தை ஆதரிப்பர். அடுத்தவர் விஷயத்தில் வரம்பு மீற வேண்டாம். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். முக்கிய வேலைகள் முடிவடையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகக்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் மனநிம்மதி இருக்கும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாகன வசதிகள் பெருகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்திற்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். அடுத்தவர் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்து போகும். புது தொழில் யோகம் அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் பிரச்சனை தலைதூக்கும். புது இடத்தில் வேலை அமையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக முடியும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். உறவினர்களால் சில சங்கடங்கள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்படுவர். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts