பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, சொந்தங்களால் பல நன்மைகள் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க வழி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

நேயர்களே, சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பொருளாதார நிலை வழக்கம் போல் இருக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். உடல் சோர்வு நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப போராட்டங்களை சமாளிக்க வேண்டிவரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி

நேயர்களே, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

நேயர்களே, நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பிரியமானவர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் சில வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். ஞாபக மறதி தொல்லை இருக்கும். ஆடை, ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தினர் ஆதரவை பெற முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மை நிலை உண்டாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts