பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல செயல்களை செய்ய முடியும். எதிரிகள் விலகுவர். முக்கிய வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்

ரிஷப ராசி

நேயர்களே, புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பேச்சு திறன் கூடும். பிரியமானவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

நேயர்களே, கடந்த சில தினங்களாக இருந்த மன சங்கடம் நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். சொத்து வழக்கில் வில்லங்கம் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உணர முடியும். உறவினர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் நலம் பலம் பெரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பல நாள் பிராத்தனைகள் நிறைவேறும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எதிர்ப்புகள் அடங்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். முக்கிய வேலைகளை பல சிரமங்களுக்கு பின் முடிக்க முடியும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர் .தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன் கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி

நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதின்றி முடியும். மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts