பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, திறமையான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். மனதிற்கு இதமான செய்தி வரும். கணவன், மனைவி உறவு பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். வீண் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடக ராசி

நேயர்களே, விலகிய சொந்தம் மீண்டும் உங்களை தேடி வருவர். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

சிம்ம ராசி

நேயர்களே, உற்றார், உறவினர்கள் தோள் கொடுத்து உதவுவர். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பண வரவில் சின்ன தடை இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப பணிகளை திறம்பட செய்ய முடியும். யாருடனும் வம்பு, வழக்கு வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சொல்லும்படி இருக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். முன்கோபத்தை குறைக்கவும். யோசிக்காமல் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். முக்கிய வேலைகள் முடிவடையும். தியானம் மூலம் மன அமைதி கிட்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். புது தொழில் யோகம் அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts