பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (08-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் தெரியவரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். உடலிலும் மனதிலும் மகிழ்ச்சி நிலவும். முக்கிய பிரமுர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களால் சில பிரச்சினைகள் வரும். வாகனங்களில் கவனமாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, எங்கும், எதிலும் பொறுமை அவசியம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். தூர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, நெருக்கடியான நேரத்தில் வேண்டியவர்கள் கை கொடுப்பர். தர்மசிந்தனை உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சீராக நடக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிடிவாத போக்கை தளர்த்திகொள்ளவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, நட்பு வழியில் மனக்கசப்பு வரும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகர ராசி

நேயர்களே, மனக்குழப்பம் அகலும். நல்லவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. உத்யோகத்தில் பணி ஆர்வம் கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, வேண்டியவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். உடல், மனம் புத்துணர்வுடன் இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி

நேயர்களே, பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தொல்லை தந்தவர்கள் தானாக விலகுவர். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts