பிந்திய செய்திகள்

இந்த வார ராசிபலன் 7.3.2022 முதல் 13.3.2022 வரை

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வேலை சம்பந்தமாக வெளியூர் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை வேறு யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத வரவு இருக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல நேரம் இது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் வெற்றி உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் மனநிறைவோடு வேலை செய்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். தினம் தோறும் சிவபெருமான் வழிபாடுவது நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிஅற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். முன்கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளை கவனமாக பேசுங்கள். உறவுகளை உதாசீனம் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சமாளித்துக் கொள்ளுங்கள். இந்த வார இறுதிக்குள் அது சரியாகிவிடும். தினம்தோறும் குருபகவான் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. முக்கியமான முடிவாக இருந்தால் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் நிலவும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். புதிய சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். உங்களுடைய சோம்பேறித்தனத்தின் மூலம் வேலை செய்யும் இடத்தில் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் உஷாராக முன்கூட்டியே எல்லா வேலையும் முடித்து வையுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட்டால் மட்டும் தான் போதுமான லாபத்தை எடுக்க முடியும். இல்லை என்றால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். மனைவிக்குப் பிடித்த விஷயங்களை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். சொத்து வாங்க கூடிய யோகமும் உங்களுக்கு இருக்கிறது. சுறுசுறுப்பாக செயல்பட்டால் நிச்சயமாக நன்மை உண்டு. மார்ச் 8, 9, 10 இந்த தேதிகளில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வம்பு சண்டைக்குப் போக வேண்டாம். சந்திராஷ்டமம் உள்ளது. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். புதிய வேலை தேடலாம். புதிய தொழில் தொடங்கலாம். புதியதாக சொத்து சுகம் வண்டி வாகனம் வாங்க வேண்டுமென்றாலும் வாங்கலாம். குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று வரக்கூடிய சூழ் நிலை அமையும். அலுவலகத்தில் உற்சாகத்துடன் வேலை செய்து நல்ல பெயரை வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் முதலீட்டை விரிவுபடுத்தலாம். யோகம் காத்துக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். தேவையற்ற வாக்குவாதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். சொல்லப்போனால் மவுன விரதம் இருப்பது நல்லது. எல்லா விஷயத்திற்கும் தலையை மட்டும் ஆட்டி கொள்ளுங்கள். வாயை திறந்தால் பிரச்சனை வந்து ஒட்டிக்கொள்ளும். மற்றபடி நிதி நிலைமை சீராக இருக்கும். கடன்தொகை வசூலாகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமைதியான வாரமாக இருக்க போகின்றது. எல்லா வேலைகளையும் தூக்கி போட்டுவிட்டு, ரெஸ்ட் எடுக்க போறிங்க. அதற்காக தினமும் வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேவையில்லாத பிக்கல் பிடுங்கல் இல்லாமல் மனநிறைவோடு வேலை செய்வீங்க. உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட்டு வாருங்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். தினம்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெளிவான வாரமாக இருக்கப்போகின்றது. கடந்துவந்த நிறைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். கூடவே சுபச்செலவுகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறுத்த முடியாது. கூடுமானவரை அனாவசிய செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்கவும். உங்களுடைய எதிர்காலத்திற்கு இதுதான் நல்லது. வேலை செய்யும் இடத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். அலைச்சல்கள் குறையும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. உங்களுடைய கவனக்குறைவினால் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வருமானம் நிறைய இருக்கும். ஆனால் செலவை குறைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் சந்தோஷம் நிலவும். உங்களுடைய அவசரமான பேச்சின் மூலம் சில பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வார்த்தையை அளந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நன்மை தரும். தினம் தோறும் முருகப் பெருமான் வழிபாடு நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts