பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (09-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். தேவைகள் அதிகரிக்கும். இழுப்பறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி வரும். புது முயற்சிகளில் இருந்த தடை விலகும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கடக ராசி

நேயர்களே, விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிரச்னையை தீர்க்க வழி கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பணப்பிரச்னை ஒரு புறம் மனதை உறுத்தும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.

கன்னி ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் கவனமாக இருக்கவும். பிரியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிக ராசி

நேயர்களே, விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம், பிரபலங்களின் தொடர்பு கிட்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். தேவை இல்லாத சிந்தனைகளால் மனக்குழப்பம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts