பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடன் பிரச்னைகள் குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். பயணங்கள் தாமதமாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கடக ராசி

நேயர்களே, நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். விலகி நின்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து இணைவர். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நாள்பட்ட குழப்பங்கள் எல்லாம் நீங்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் உயரும். பிராத்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, தள்ளிப் போன காரியங்கள் முடியும் விரைவில் முடியும். உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts