பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மனம் விட்டு பேசவும். பழைய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வு உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி

அன்பகளே, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் பட்டதை தாமதமின்றி செய்ய முடியும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

கடக ராசி

அன்பர்களே, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. பிரபலங்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தாரிடம் வாதம் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறகும்.

கன்னி ராசி

அன்பர்களே, உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுகொள்வர். பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய யோசனைகள் சரியாக கைகொடுக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். வாழ்க்கை தரத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தொழில், வியபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, உங்கள் செல்வாக்கை உயர்த்த வழி கிடைக்கும். மனக்கவலைகள் அடியோடு மறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். புது நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். புது தொழில் யோகம் அமையும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மன பாரம் குறையும். நல்ல மனிதர்களின் தொடர்பால் எளிதில் காரியும் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts