பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(13-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப நபர்களிடம் வளைந்து கொடுத்து போகவும். பெற்றோர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவர். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, உறவினர்களின் அன்பு மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

அன்பர்களே, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். தெய்வ வழிபாடு மூலம் குறைகள் தீரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்ம ராசி

நேயர்களே, உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். உத்யோகத்தில் கெடுபிடிகள் குறையும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மன சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும்.

துலாம் ராசி

நேயர்களே, திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிரிகள் ஒதுங்கி நிற்பர். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும். மன பயம் நீங்கும். இடம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, மன நிம்மதி ஏற்படும். பெரியோர்களிடம் அன்பும், பாசமும் அதிகமாகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலம் பெரும். தேவையற்ற பயணங்களை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி

நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத் தேவைகள் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts