பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் சில அவசர முடிவுகள் எடுக்க வேண்டிவரும். முன்பு தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலையில் மாற்றம் உண்டாகும். உடன்பிறப்பால் உங்கள் மதிப்பு உயர துவங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். நட்பு வழியில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தை திறமையாக நிர்வாகிப்பீர்கள். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மனகுழப்பம் நீங்கும். உத்தியோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி

அன்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கோப தாபங்களை குறைத்துகொள்வது நல்லது. கடன் தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் செலவழிக்க வேண்டிவரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி

அன்பர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். காரிய அனுகூலம் உண்டாகும். நட்பு வழியில் சில விரயங்கள் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி தோன்றும். காரியத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கவும். பண வரவு தாமதப்படும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். மன சோர்வு, உடல் சோர்வு நீங்கும். காரிய தடை விலகும். உத்தியோகத்தில் அதிகாரியின் பாராட்டுதல் கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts