பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தேவையான பொருட்கள் வாங்க முடியும். திருமண முயற்சி கைகூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் புதுமையான் விஷயங்கள் நடக்கும். மன போராட்டங்கள் குறையும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப பணிகளை கவனிக்க வேண்டிவரும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப முன்னேற்றத்தில் கவனம் தேவை. வெளிவட்டத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

அன்பர்களே, அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். உறவினர்களால் செலவுகள் ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மனம் விட்டு பேசவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். புது நபர்களிடம் ஒரு அளவோடு பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். புது தொழில் யோகம் அமையும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, முக்கிய பணிகள் எந்தவித தடையின்றி முடியும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப வாழ்வில் வரும் நெருக்கடிகள் குறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி

அன்பர்களே, பெரியோர்களின் ஆலோசனை மனதிற்கு நம்பிக்கை தரும். மனம் பக்குவம் அடையும். வசதி வாய்ப்புகள் பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி

அன்பர்களே, மனதில் புதுமையான சிந்தனைகள் தோன்றும். உடன்பிறப்பு வகையில் சில நன்மைகள் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப பிரச்சனைகள் குறையும். உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவர். உடல் நிலையில் சிரமம் காண நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts