பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(17-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். புது நண்பர்களால் சில சிக்கல்கள் வரக்கூடும். அன்றாட தேவைகள் அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படவும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். பிரியமானவர்கள் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

சிம்ம ராசி

நேயர்களே, எதிர்பார்த்த காரியம் தாமதமின்றி நிறைவேறும். செல்வாக்கானவர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சொத்து வழக்கில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். எப்போதும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்துப் சேருவர். பயணங்கள் அலைச்சலை தரும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.

தனுசு ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். அண்டை, அயலாரிடம் கவனமாக இருக்கவும். பழைய கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்ய விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். மனச்சுமை அதிகரிக்கும். நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சந்தோஷத்தை கொடுக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, புது முயற்சிகளை தள்ளி போடவும். மற்றவர்களை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts