பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அனாவசிய செலவை குறைத்துகொள்ளவும். தியானம் மன அமைதியை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பிரபலங்களின் தொடர்பு கிட்டும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

கடக ராசி

அன்பர்களே, மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பயணங்களால் அலைச்சல் இருக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

அன்பர்களே, பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் தோன்றும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். அடுத்தவர்கள் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

அன்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

அன்பர்களே, நிறைவேறாத ஆசைகள் இப்போது நிறைவேறும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். கடன் பிரச்னை குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். புது முயற்சிகள் சாதகமான பலனை உறவினர்கள் இல்லம் நாடி வருவர். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, பெற்றோரின் அன்பும், பாசமும் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts