பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (20-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, உறவினர்கள் வழியில் நன்மை உண்டாகும். முக்கிய காரியங்கள் நிறைவேறும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றி பெரும். பிரியமானவர்களிடம் இருந்த மனஸ்தாபம் வரும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

கடக ராசி

நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, கடினமான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, புது நண்பர்கள் அறிமுகமாவர். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். பேச்சில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, முக்கிய வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். நெருக்கமானவர்கள் உதவி கரம் நீட்டுவர். பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பெற்றோர்களின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மீன ராசி

நேயர்களே, தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடரும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts