பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (21-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். நல்ல மனிதர்களின் சிநேகிதம் கிடைக்கும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கோபமும், பிடிவாதமும் உங்கள் பலத்தை குறைக்கும். முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப பராமரிப்பு செலவுகள் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். சொந்த பந்தங்கள் இல்லம் நாடி வருவர். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

கடக ராசி

நேயர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம் ராசி

நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கடன் பிரச்சனை குறையும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, எல்லா காரியங்களும் தடையின்றி நிறைவேறும். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பெற்றோர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்ப விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடல் உபாதைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்லது நடக்க ஆரம்பிக்கும். மன சோர்வு நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். முக்கிய விஷயங்களை பகிர வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பதில் சற்று நிம்மதி குறைந்து காணப்படும். எதிர்ப்புகள் அடங்கும். உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts