பிந்திய செய்திகள்

இந்தவார ராசி பலன் 21.02.2022 முதல் 27.02.2022 வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பொறுமை அவசியம் தேவை. கவனமாக செயல்பட்டால் சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தோடு வேலை கிடைக்கும். சொத்து வாங்க கூடிய யோகமும் சில பேருக்கு உண்டு. கவனமில்லாமல் அலட்சியப்போக்குடன் சின்ன வேலையை செய்வதன் மூலம் கூட பெரிய அளவு நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். அனாவசியமாக முன் கோபப்படக்கூடாது. அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேச கூடாது. வார்த்தையில் கவனம் தேவை. வார்த்தைகளை கொட்டி விட்டால் மீண்டும் அல்ல முடியாது அல்லவா. அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன்-மனைவிக்கிடையே வந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். உறவினர்களின் வருகை கொஞ்சம் வீண் செலவைக் கொடுக்கும். சுபச்செலவு தான். பயம் கிடையாது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டு மழை பொழிய போகின்ற வாரமாக இருக்கப்போகின்றது. எல்லா விஷயத்திலும் உங்களுக்கு வெற்றி தான். வேலை செய்யும் இடத்தில் செய்த வேலைக்கான புகழும் பாராட்டும் சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்லும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத அளவிற்கு லாபம் வர நிறைய வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்தையும் பேசிப்பேசியே சாதிக்க போகிறீர்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட நூறு ரூபாய் உங்களுக்கு லாபம் கிடைக்கும் பாருங்களேன். எல்லாம் சுபமாக நடக்கும் இந்த வாரத்தில் முடிந்தால் குலதெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான பலன்கள் கொடுக்கக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. உங்கள் வேலைகளை முன் கூட்டியே முடித்து விடுவீர்கள். அதற்கான பாராட்டையும் பெற போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகின்றது. சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்தும் மரியாதையும் உயர்ந்து கொண்டே செல்லும். இதுநாள் வரை இருந்த ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும். குடும்ப விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. தினமும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்து வாருங்கள்.

சிம்மம்:

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எல்லாம் நேர்வழியில் தான் நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உங்களுக்கு நன்மை நடக்கும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்ற பழமொழியை உங்கள் மனதிற்குள் ஆழமாக விதைத்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. இருக்கும் வேளையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட அதில் அனுசரித்து இருக்கவேண்டும். வேலையை விட வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டாம். தினந்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா முயற்சிகளும் வெற்றி தரப் போகின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நடத்திக் காட்டுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து உங்களுக்கு உதவியாக இருக்கும். பழைய கடன் பாக்கிகளை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அனுசரணையாக உங்களுடைய மேல் அதிகாரிகள் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாக வாய்ப்புகள் உள்ளது. புதியதாக சொத்து வாங்குவதற்கு யோகம் உள்ளது. பெண்கள் குடும்ப உருவ உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபம் கூடாது. தினம் தோறும் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதையோ நினைத்து மனதில் லேசான குழப்பம் இருக்கும். ஆனால் நீங்கள் எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு எல்லாம் நன்மையாக மட்டும்தான் நடக்கும். அடுத்தவர்களுடைய பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் நீங்கள் தலையிடாதீர்கள். யாருக்கும் போய் நின்று பஞ்சாயத்து செய்யாதீர்கள். உங்களுடைய பொறுப்பை கவனமாக நீங்களே செய்யுங்கள். அடுத்தவர்களை நம்பி முக்கியமான வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். தினமும் காலை எழுந்தவுடன் விநாயகர் வழிபாடு உங்களுக்கு வெற்றியை மட்டும் தான் கொடுக்கும் மன கவலை தேவையில்லை.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு சொல்வாக்கும் செல்வாக்கும் உயரப் போகின்றது. நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் வைப்பதுதான் சட்டம் என்று ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. வாக்கு சாதுர்யம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கும்‌. பேசிப்பேசி எல்லா விஷயத்தையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் படிப்படியாக குறையும். சேமிப்பு படிப்படியாக உயரும். வீட்டில் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. வரக்கூடிய வருமானத்தை வைத்து முடிந்தால் யாருக்கேனும் உதவி செய்வது மேலும் நன்மையைத் தரும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய வேலையை மட்டும் தான் கவனமாக செய்யவேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடவே கூடாது. குறிப்பாக யாருக்கும் இதை செய்கின்றேன், அதை செய்கின்றேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு கடைசியில் அவமானத்தைத் தேடித் தந்து விடும். குடும்பத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் வந்தாலும் அதை அப்படியே அட்ஜஸ்ட் செய்து செல்வது நல்லது. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம். முன் கோபத்தை குறைக்க மனதிற்குள் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப்போகிறது. தேவையில்லாத கவலைகள் உங்களை விட்டு தூரம் சென்று விடும். வேலை செய்யும் இடத்தில் மனநிறைவான நிலைமை உண்டாகும். சொந்தத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கி எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்க. குடும்பத்தின் மீது அக்கறையாக இருக்க வேண்டும். குடும்பத்திற்காக கொஞ்சம் நேரத்தை ஒதுக்குவது நல்லது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும். செலவுகள் ஒரு பக்கம் செய்து கொண்டே இருப்பீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாகவே நிறைய விஷயங்கள் நடக்க போகின்றது. குடும்பத்தோடு கோவில் சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற அலைச்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் அமைதி. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில பேருக்கு அதிகமான அலைச்சல்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையில் அதிக கவனம் தேவை. அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். தேவையில்லாத சண்டையில் மூக்கை நுழைக்காதீர்கள். முன்கூட்டியே உங்களுடைய வேலையை முடித்து வைத்துக்கொள்வது நல்லது. இன்றைய வேலையை முடிக்காமல் நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போடுவது எதிர்காலத்தில் சில சிக்கல்களை உண்டுபண்ணி விடும். இந்த வாரம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts