பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். நட்பு வழியில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பணம் வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

அன்பர்களே, பேசும் வார்த்தைகளில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப சவால்களை சந்திக்க வேண்டி வரும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். வீண் செலவுகளை குறைக்க பார்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

அன்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோப தாபங்களை குறைத்துகொள்ளவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். பிரியமானவர்களுடன் இருந்த மனஸ்தாபம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி தோன்றும். மன பாரம் குறையும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். காரிய தடை விலகும். உடல் நிலை சீராக இருந்து வரும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.

மீன ராசி

அன்பர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். முக்கிய வேலைகளை தாமதின்றி முடிக்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் கவனம் தேவை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts