பிந்திய செய்திகள்

ஏர்டெல்-ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7000.00

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.

குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது.

இதைத்தவிர பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம், அதன்பிறகு 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் வேலை செய்துகொள்ளலாம்

அதேபோல சமீபத்தில் தந்தையானவர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துகொள்ளலாம் அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts