பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, பிரியமானவர்கள் வழியில் நல்லது நடக்கும். தன வரவு தாமதமாகும். நண்பர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு செலவு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.

மிதுன ராசி

அன்பர்களே, மனதில் நினைத்ததை சாதிக்க முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வரும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். சேமிக்கும் பழக்கத்தை பழகிக்கொள்ளவும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

அன்பர்களே, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் முடியும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்

கன்னி ராசி

அன்பர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். பிரபலங்கள் அறிமுகமாவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

அன்பர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். எதிரிகள் அடிபணிந்து போவர். அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, சொந்த பந்தங்களால் நன்மை வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். முக்கிய தேவைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

மகர ராசி

அன்பர்களே, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவர்.கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாகும். வேற்று மதத்தவர் பக்கபலமாக இருப்பர். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts