பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (26-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

ரிஷப ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பயணங்களை தள்ளி வைக்கவும். சொத்து பிரச்சனையில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். தள்ளி போன காரியம் விரைவில் முடியும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். பாலிய நண்பர்களை சந்திக்க நேரிடும். ஆடம்பர வாழ்க்கை அமைய வழி பிறக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். மனம் தெளிவு பெரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான நிலை அமையும்

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். பிரியமானவர்களிடம் இருந்த மனகசப்பு நீங்கும். தியானத்தால் மன அமைதி ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

நேயர்களே, பேச்சில் எப்போதும் நிதானம் தேவை. நெடுநாட்களாக விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். பெற்றோரின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப நபர்களிடம் வாதம் செய்ய வேண்டாம். உறவினர்களால் சில நெருக்கடிகள் வரும். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். தொழில், வியாபாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, எதிர்பாரா செலவுகள் அவ்வப்போது வந்து போகும். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடத்தில் விரோதங்கள் ஏற்படலாம். தொழில், வியாபரம் சிறக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். புது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். கடன் பிரச்னை குறையும். புது தொழில் யோகம் அமையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தினருடன் அனுசரித்து போகவும். காரிய தடை விலகும். தேவையற்ற மனபயத்தை நீக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts