பிந்திய செய்திகள்

உடனே அப்டேட் பண்ணுங்க வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும்.

இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.

இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வாட்ஸ்ஆப், பயனர்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts