பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (27-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தினர் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். சமூக அந்தஸ்து உயரும். விலகி நின்றவர்கள் மீண்டும் நாடி வருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி

அன்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கானவர்களின் தொடர்பு கிட்டும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். கணவன் மனைவியிடையே இருந்த பகைமை நீங்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப நிர்வாகத்தில் கவனம் தேவை. எதிர்கால திட்டங்கள் பற்றிய சிந்தனை இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப பெருமை உயரும். உங்கள் திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவி ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி

அன்பர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக ஆர்வம் கூடும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்க்கவும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பராமரிப்பு செலவுகள் கூடும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி

அன்பர்களே, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. மனதில் கவலைகள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் பொறுமை அவசியம்.

கும்ப ராசி

அன்பர்களே, புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். பெற்றோர்கள் அன்பும், அரவணைப்பும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

அன்பர்களே, புதிய நண்பர்களின் சேர்க்கை நம்பிக்கை தரும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்படுவர். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts