பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, எதிர்காலம் பற்றிய யோசனை அதிகமாகும். பண வரவு தாமதப்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்ப சிக்கலை சமாளிக்க முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்ச்சுமை குறையும்.

மிதுன ராசி

அன்பர்களே, எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். புது நட்பால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியடையும்.

கடக ராசி

அன்பர்களே, தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பயணங்களால் நன்மை உண்டு. உத்யோகத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மன பாரம் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

அன்பர்களே, பொருளாதார வளம் மேம்படும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, புது விஷயங்களில் ஆர்வம் கூடும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். புது முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். நண்பர்களிடகத்தில் கேட்ட உதவி கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் திட்டமிடல் அவசியம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். நெருங்கிய உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனபாரம் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். எதிரிகளின் பலம் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts