பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தினரிடம் வீண் விவாதங்கள் வந்துப் போகும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். புது தொழில் யோகம் அமையும்.

மிதுன ராசி

நேயர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வசீகரப் பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி

நேயர்களே, எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். யாரையும் குறை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப வருமானம் உயரும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். யாரிடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். பராமரிப்புச் செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி

நேயர்களே, புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி

நேயர்களே, சமூகத்தில் அந்தஸ்து வெகுவாக உயரும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுப் பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts