பிந்திய செய்திகள்

இந்த வார ராசிபலன் 28/3/2022 முதல் 03/04/2022 வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவினர்களிடம் கொஞ்சம் உஷாராக பழகவேண்டும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட கூடாது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். இருப்பினும் யாரை நம்பியும் எதற்காகவும் அதிகமான முதலீட்டை செய்ய வேண்டாம். பண விஷயங்களில் கவனம் தேவை. படிப்பில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் உள்ள பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நிதி நிலைமை சீராகும். வங்கி கணக்கில் பணம் உயரும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் எதிர்பார்ப்பதைவிட இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு, கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் வெளிநாடு செல்வதற்கு கூட வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் குடும்ப விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். வாழ்க்கை துணையுடன் சண்டை வந்தால் அனுசரித்து செல்லுங்கள். இந்த வார இறுதியில் லேசான மன குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு செயல்பட்டு எல்லா வேலைகளிலும் வெற்றியடைய போகிறீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் போட்டு வைத்திருக்கும் வேலைகளை இன்று கையில் எடுக்கலாம். நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். ஆனால் உறவினர்களிடத்தில் ஒரு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் வண்டி வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுடைய பொருட்களை நீங்கள் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வார இறுதியில் கொஞ்சம் சுபச்செலவுகள் இருக்கத்தான் செய்யும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத வருமானம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்து நீண்ட நாட்களுக்குப் பின், நீண்ட போராட்டத்திற்குப் பின் உங்கள் கை வந்து சேரும். அந்த வருமானத்தின் மூலம் புதிய சொத்து சேர்க்கை இருக்கும். ஆனால் உங்களுக்குவரக்கூடிய வருமானத்தை பற்றி மிகவும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் இடத்தில் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. யாரையும் நம்மையும் பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். மார்ச் 28, 29, 30, ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் சமையலறையில் சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். ஏதாவது காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீண் விவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் சோர்வால் சோம்பேறித்தனத்தால் உங்களுடைய வேலையில் சிறிது பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதம் 31, மே 1 ஆம் தேதி அன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரு உற்சாகம் தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். புதிதாக சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கொஞ்சம் நிதானம் தேவை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசியமாகத் தேவைப்படுவது பொறுமை மட்டும்தான். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுடைய வேலையை நீங்கள் செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. புதியதாக எந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதிகப்படியான முதலீட்டினை சொந்த தொழிலில் போடவேண்டாம். காசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற மனக் குழப்பத்தோடு எந்த ஒரு புதிய முடிவுகளை எடுக்காதீர்கள். நல்ல விஷயங்கள் செய்வதை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் செய்யலாம். அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதுபவர்கள் அதற்கான வேலைகளை தொடங்கலாம். உங்களுடைய புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சமயோசித புத்தியால், பின் வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கு உண்டான வேலைகளை செய்ய தொடங்கி விடுவார்கள். புதிய சொத்து வாங்க கூடிய யோகம் உள்ளது. புதிய முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். இந்த வார இறுதியில் உடல்நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய ரீதியாக பிரச்சனைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. நிதி நிலைமை சீராக தான் இருக்கும். புதியதாக சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகள் கூட தேடிவரும். ஆனால் வாய்த்தகராறு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் மவுன விரதம் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதம் கைகலப்பில் போய் முடிந்துவிடும். உஷாராக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் கூட யாராவது ஒருவர் வாயை மூடிக் கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்த செல்லுங்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசாக மன சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடனே பயந்து விட வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது என்பது வாழ்க்கையில் இயல்புதான். அதை சமாளிப்பதற்கு உண்டான தெம்பு உங்களிடம் உண்டு. அந்த ஆண்டவன் உங்களுக்கு நல்லதொரு வழியை காண்பித்து கொடுப்பான். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அவசரப்படாதீர்கள், முன் கோபப்படாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. அதற்காக செய்யும் வேலையை விட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். சில நாட்களில் இது சரியாகி விடும். வேலையை விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரக்கூடாது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

கும்பம்:

கும்ப ராசி காரர்களுக்கு செலவுக்கேற்ற வருமானம் வந்துகொண்டே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் கொஞ்சம் குறைவாக கிடைத்தாலும், பிரச்சினைகள் எதுவும் வராது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்புதான் கடனை குறைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. செய்யும் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். அதேசமயம் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த வார இறுதியில் அலைச்சல் அதிகமாக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே கூடுதல் அன்பு கிடைக்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts